ஒரு வார்த்தை தூண்டிய கோபம்
சொன்னது ஒரு பேதையெனிலும்
சொன்னது வார்த்தை
பழக்கமில்லா வார்த்தை
பழகிக்கொள்ள இஷ்டமில்லா வார்த்தை
வார்த்தைக்குப்பின் எண்ணம் எதுவாயினும்
சொன்னது யாராயினும்
ஒரு வார்த்தை
ஒரு அம்பு
ஏன் இவ்வளவு பெரிய காயம்
வார்த்தையின் கனம் அதிகமா
கூர்மை அதிகமா
சொன்ன நேரமா
சொன்ன ஆளா
அல்லது தாங்கும் வலிமை இல்லையா
இங்கு ரணப்பட்டது
உடலா
அறிவா
மனமா
இல்லை அகங்காரமா
கோப உக்கிரம்
ஒரு வார்த்தை தூண்டிய கோபம்
பழக்கமில்லா வார்த்தை
பழகிக்கொள்ள இஷ்டமில்லா வார்த்தை
No comments:
Post a Comment