Monday, October 20, 2008

இலைகளுக்கு உணவிடு


இலைகள் ஆடும், சலசலக்கும், சப்தமிடும். 
ஆனால் வேர்? 
இலையாக இருந்தது போதும். 
சலசலத்தது போதும். 
சப்தமிட்டது போதும். 
அடுத்தவரால் ரசிக்ககப்பட்டது போதும்.
தன்னுள்ளே முழுகு. 
மன்னுக்குள்ளே இறங்கு. 
வேராக மாறு. 
உள்ளுக்குள்ளேயே வளர். 
கிளை விடு. 
மரத்தை தாங்கு. 
உயிர் நிறுத்து. 
இலைகளுக்கு உணவிடு. 

No comments: