நூராயிரம் வருட அனுபவத்தால் பெற்ற இரவின் ஞான அமைதி.
குட்டி நாயின் விளையாட்டு.
விரியாத மொட்டின் நாணம்.
விரிந்த மலரின் அகங்காரம்.
ஆல மரத்தின் பெருந்தன்மை.
குயிலின் திறமை தந்த அலட்சியம்.
குழைந்தையின் மொழிப் பிழை.
ஞாநிக்கு ஞானம் தந்த முழுமை.
முட்டாளுக்கு அறியாமை தந்த சந்தோஷம்.
நிலக் காதலியோடு அலை விளையாடும் முடிவில்லா விளையாட்டு.
அதிகாலையின் புதுப் பெண் வெட்கம்.
மாலை நேரத்துத் தங்கக்கடல்.
பின்னிரவில் கடலோர முழு நிலா.
தீயின் தங்க விளையாட்டு.
அந்தி மல்லிகை.
நாணம் உரைத்த மௌனம்.
மௌனம் உரைத்த கவிதை.
இரவில் தூரத்தில் கேட்கும் பாட்டு.
உழைப்பாளியின் வியர்வை உடல்.
அழுது முடிந்த குழந்தையின் சிறு விசும்பல்.
இசை.
தமிழ்.
சில விஷயங்கள் எத்தனை முறை சுவைத்தாலும் சலிப்பதே இல்லை.
No comments:
Post a Comment